ஜே ஜே படத்தில் நடித்த நடிகையா இது? நம்பவே முடியல இளமை குறையாமல் அப்படியே இருக்கிறார்.. புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் 90 காலக் கட்டங்களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்றால் நடிகர் மாதவன் தான். இன்று வரை இவருக்கு பெண்களின் ரசிகைகள் மட்டுமே அதிகம். மாதவன் நடிப்பில் வந்த படம் ஜே ஜே அதில் ’உன்னை நான்..உன்னை நான் உன்னை நான்’ எனத் தொடங்கும் ஜே ஜே திரைப்படத்தின் பாடல் இப்போதும் கூட காதலர்களின் பேவரட் பாடல்.

மாதவன் நடிப்பில் இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப் பெற்றது. இதில் பிரியங்கா கோத்தாரி என்ற அமோகா ஹீரோயினாக நடித்திருந்தார் உத்திரப் பிரதேசத்தில் 1983ல் பிறந்த இவர் சினிமாவின் மீது  ப்ரியம் கொண்டவர். இந்தியில் ஒரு பாடலுக்கு ஆடியது இவருக்கு நல்ல பெயரைக் கொடுக்க மாதவனின் ஜே ஜே திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.

இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்தார். தொடர்ந்து இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற 18 பிளஸ் படத்தில் நடித்தார். இது அவரை தேசம் முழுவதும் பேமஸ் ஆக்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 2010ல் ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் ஒரு குத்துப் பாட் டுக்கு ஆட்டம் போட்டார்.

இவர்  சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விட்டு டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரை கல்யாணம் செய்து செட்டிலானார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இ ணையத்தில் வைரலான நிலையில் அவரா இது. என கேட்கும் அளவுக்கு அடையாளமே தெரியாமல் மாறிப் போயுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *