கமல் நடித்த நாயகன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவரை ஞாபகம் இருக்கா.. இப்போது அவரது நிலை இது தான்.. என்ன செய்கிறார் தெரியுமா?

செய்திகள் திரையரங்கம்

தமிழ்த்திரை உலகில் தன் நீண்ட நெடிய கலைப் பயணத்தால் உலகநாயகன் என கொண்டாடப்படுபவர் கமலஹாசன். மக்கள் நீதி மயம் என்னும் அரசியல் கட்சியோடு பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இப்போது தொகுத்து வழங்கி வருகிறார்.

அவர் நடிப்பில் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் படம் என்றால் அது ‘நாயகன்’ படத்துக்கு முக்கிய இடம் உண்டு. இது தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கிலும் பெரும் வெற்றி பெற்றது. இதில் கமலின் மகளாக நடித்தவர் கார்த்திகா. வேலுநாயக்கரின் மகளாக இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

மேலும் அதற்கு முன் பல மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும் அவரின் முதல் தமிழ்ப்படம் இது தான். அவரது மலையாளத் திரையுலக அறிமுகமே மோகன்லாலுக்கு நாயகியாக நடித்தது தான். ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைவதனால் அவர் ஒரு டாக்டரை திருமணம் செய்தார்.

அவரது மகன் விஷ்ணுவுக்கு இந்த கொரோனா லாக்டவுன் முன் தான் திருமணம் நடந்தது. அதில் பல திரைப்பிரபலங்களும் கலந்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *