பிரபல முன்னணி நடிகர் தலைவாசல் விஜய்யின் மகனை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா .. பார்க்க அச்சு அசலா அவரை போலவே இருக்கிறார் ..!! 1962ஆம் ஆண்டு கன்னியாகுமாரியில் பிறந்தவர் தான் ஏ.ஆர். விஜயகுமார். இவர் தமிழில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த தலைவாசல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.இதன்மூலம் தான் இவரை தலைவாசல் விஜய் என அழைக்கப்பட்டு வருகிறார். இப்படத்தை தொடர்ந்து இன்று
வரை பல திரைப்படங்களில் குணசித்ர கதாபாத்திரங்களில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்துள்ளார். வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்துள்ளார்.
நடிகர் தலைவாசல் விஜய்க்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்த நிலையில், இவருடைய மகன் ஜெய்வன்ட் விஜய்யின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இவரை பார்த்த பலரும், அச்சு அசல் அப்படியே தலைவாசல் விஜய் போலவே இருக்கிறாரே என பலரும் கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.