நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.இதை தொடர்ந்து தன்னுடைய கடைசி படம் தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்கப்போவது ஹெச் வினோத் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.
நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரின் தம்பி எஸ்.என். சுரேந்தர் என்பதை நாம் அறிவோம். இவர் பின்னணி பாடகரும், டப்பிங் கலைஞரும் ஆவர். இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். அதில் ஒருவர் தான் விராஜ்.நடிகர் விராஜ், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த அந்நியன் திரைப்படத்தில் சிறு வயது விக்ரம் ரோலில் நடித்திருந்தார்.
நடிகர் விஜய்யின் மாமா மகனை பார்த்துள்ளீர்களா.. அவரும் ஒரு நடிகர் தானா | Vijay Cousin Is A Actorஇதன்பின் சென்னை 28 திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் திரைப்படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார்.