நடிகர் விஜய் நடிப்பில் லியோ என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப் படத்தின் ஷுட்டிங்கிற்காக படக்குழு தனி விமானத்தில் சென்ற புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி இருந்தது.தொடர்ந்து காஷ்மீரில் இருந்து விஜய் சென்னை திரும்பிய போது எடுத்த வீடியோவும் வெளியாகியிருந்தது.
இப்படியான ஒரு நிலையில் இப்படத்தில் மிஷ்கின் கௌதம் மேனன் போன்ற இயக்குநர்களும் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.நடிப்பைப் போல விஜய் சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். தனது ரசிகர் மன்றத்தின் ஊடாக ஏராளமான உதவிகளையும் செய்து வருகின்றார். இருப்பினும் தனது குடும்ப விவகாரத்தினால் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.
விஜய்யின் மகளான திவ்யா சாஷா சென்னை அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வந்தார்.இவருக்கு தற்போது 18 வயதாகின்ற நிலையில், வெளிநாட்டில் தங்கி படித்து வருகிறார். மேலும், இவர் 2016ஆம் ஆண்டு வெளியான தெறி திரைப்படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார்.அந்த திரைப்படத்தில் கூட சிறிய பிள்ளையாக இருந்த அவர் தற்போது செம்ம மாடர்னாக மாறியிருக்கிறார்.