தமிழ் சினிமாவில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக, சின்னத்திரை நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் அனு மோகன் என்பவர். மேலும், நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மின்சார கண்ணா திரைப்படத்தில் அவருடைய டயலாக் நீங்கதானே புறாவுக்கு பெல் அடித்தது என்று
விஜய் பார்த்து சொல்லும் வசனம் மிகப்பெரிய அளவு பிரபலமானது. சமிபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த நான் கேரளாவுக்கு போகும் பொழுது ரசிகர்கள் என்னைபுறா என்று கூப்பிடுவார்கள். அந்த அளவிற்கு விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் இருக்கின்றார்கள்.
மேலும், நம் நடிகர் ரஜினியின் படையப்பா படத்தில் நடித்த பிறகு என்னை பார்த்தால் பலரும் நீங்க தானே அந்த பாம்பு புத்து என்று கேட்பார்கள்.என் வீட்டிலேயே என்னை பாம்பு என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டாக அந்த அளவுக்கு ஒரு சில திரைப்படத்தின் கதாபாத்திரம் என்னை பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.