பிரபல முன்னணி நடிகர் அருண் பாண்டியன்ன் என்பவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகராவார். இவரின் தந்தை முன்னாள் இராணுவ வீரர். தமிழ் மொழியில் விகடன், போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ஐங்கரன் பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இவர் தென்னிந்திய திரைப்பட நிதியாளர்கள் சங்கத்தின்செயலாளராகவும், தென்னிந்திய திரைப்பட ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
தமிழ் திரையுலகில் ’சிதம்பர ரகசியம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்’ உள்பட பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் அருண் பாண்டியன்.பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். அருண் பாண்டியனுக்கு கவிதா பாண்டியன், கிரானா பாண்டியன், மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.
ஏற்கனவே இருவருக்கு திருமணமாகிவிட்டது. நடிகையான கீர்த்தி பாண்டியன் ’அன்பிற்கினியாள்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், இவருக்கு நடிகர் அசோக் செல்வனுடன் திருமணம் நடக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து இரு வீட்டார் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.