என்னது.. என் தங்கச்சி ஓரினச் சேர்க்கையாளரா..? அவ இப்படிப்பட்டவ தான்.. தங்கை மாயா குறித்து அக்கா வெளியிட்ட அதிரடி தகவல்..

விக்ரம் படத்தின் மூலம் புகழ் பவ்ற்றவர் தான் இந்த மாயா.. தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் பெரும் ஆரவாரத்துடன் துவங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். துவங்கியது முதலே மாயா ரசிகர்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்து வருகிறார். அவரின் உண்மைமுகம் தற்பொழுது வெளிப்பட்டு வருகிறது. தற்பொழுது 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மொத்த போட்டியாளர்களில் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், பிரதீப் , அன்னபாரதி என 7 போட்டியாளர்கள் இதுவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். குறிப்பிடத்தக்க நிகழ்வாக கடந்த வாரம் சனிக்கிழமை போட்டியாளர் “பிரதீப் பிக்பாஸ்” வீட்டிற்குள் இருந்தால் ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என கூறி “ரெட் கார்டு” கொடுத்து கமலஹாசனால் வெளியேற்றப்பட்டார். இதற்கு தற்பொழுது வரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரெட் கார்டு சூழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம் மாயா தான். அவரும் அவருடைய குழுவும் ஒன்றாக சேர்ந்து பிளான் போட்டு பிரதீப்பை வெளியேற்றினர். இதனால் மக்கள் இவர்கள் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். சமீபத்தில் பிரபல பாடகி சுசித்ரா பிக் பாஸ் போட்டியாளரானா மாயா மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதில் அவர் கூறும்பொழுது ‘இயக்குனர் கவுதம் மேனனின் உதவி இயக்குனருடன் பழக்கம் இருந்தது. மாயா ஒரு லெஸ்பியன். இந்த விஷயம் பிரதீப்புக்கும் தெரியும். என்னுடைய முன்னாள் கணவர் கூட மாயாவுக்கு பல உதவிகள் செய்துள்ளார். மாயா ரொம்ப மோசமானவர்’ என்று கூறியிருந்தார் .

இந்நிலையில் மாயாவுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக அவரது அக்கா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சுசித்ராவின் சமீபத்திய நேர்காணலில் அவர் மாயா பற்றிய மோசமான அவதூறுகளை முன்வைத்தது கண்டிக்கத்தக்கது. மாயாவின் செயல்களை தவறாக சித்தரிக்கும், LGBTQ+ மக்களின் வாழ்க்கை சட்டத்திற்கு எதிராக Homophobic ஆக பரப்புரைக்கும் சுசித்ரா மீது மாயாவின் குடும்பத்தார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

பதில் சொல்லும் நிலையில் இல்லாத ஒரு நபர் மீது மக்கள் இல்லாத அவதூறு கருத்துக்களை வீசுவதை பார்ப்பது பரிதாபமாக உள்ளது. தனக்கு வெளி உலகில் நிகழும் அவமானங்களையும் , அநீதிகளையும் பற்றி எந்த அறிவிப்பும் இல்லாத சூழலிலும் மாயா-வுக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றி’ என பதிவு செய்திருக்கிறார் மாயாவின் அக்கா ஸ்வாகதா. தற்பொழுது இவரின் பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அவரின் பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Swagatha S Krishnan (@singerswagatha)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *