60 வயது பிரபல நடிகரை காதல் செய்யும் இளம் நடிகை!! அதுவும் பணத்துக்காக இப்படியா? யார் அந்த நடிகை..!!

திரையரங்கம்

சினிமாவில் பொதுவாக திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் எத்தனை வயதானாலும் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார்கள். ஆனால் நடிகைகள் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு திரைப்படங்களில் கதாநாயகியாக ஏற்று கொள்ளபடுவதில்லை.

இருப்பினும் நடிகர்கள் 60- வயதை கடந்த நிலையிலும் தொடர்ந்து திரைப்படங்களில் முன்னணி நட்சத்திரங்களாக நடித்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு பெரும்பாலும் ஜோடியாக நடிப்பவர்கள் இவர்களை காட்டிலும் வயதில் மிகவும் சிறு வயது பெண்களாகத்தான் உள்ளார்கள்.

அந்த வகையில் தெலுங்கில் பல வருடங்களாக முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் மூத்த நடிகரும் லேஜண்டுமான பாலகிருஷ்ணன் அவர்கள். தற்போது 60- வயதை கடந்த நிலையிலும் இன்றளவும் தெலுங்கு பிரபல மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார்.

தெலுங்கு சினிமா என்றாலே சொல்ல தேவையில்லை சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது அதிலும் இவர்கள் ச ண்டை காட்சிகளின் பில்டப்புக்களுக்கு அளவே இல்லை. அந்த வகையில் பில்டப் சண்டை காட்சிகளுக்கு பெயர் போனவர் தான் பாலகிருஷ்ணன்.

இவரது நடிப்பிற்கும் சண்டை காட்சிகளுக்கும் என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருப்பதோடு சினிமா உலகில் இன்றளவும் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார்.

மேலும் இவரது படத்தில் நடிப்பது என்றாலே கதாநாயகிகள் முதல் துணை நடிகர்கள் வரை அனைவரும் பயத்திலேயே இருப்பார்கள். காரணம் அவருக்கு கோபம் வந்து விட்டால் என்ன செய்வார் என்றே தெரியாது பயந்தே பல நடிகைகள் இவரது படத்தில் நடிக்க ஒப்பு கொள்வதில்லை.

இருப்பினும் இதையும் கடந்து இவர் படத்தில் நடித்து விட்டால் பிரபலமாகி விடலாம் என்ற ஆசையில் பல நடிகைகள் இவரது பட வாய்ப்புக்காக காத்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் பல வருடங்களாக இவருடன் நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர் தான் பிரபல நடிகை பூர்ணா.

தெலுங்கு திரையுலகில் பல வருடங்களாக தொடர்ந்து நடித்து வந்தாலும் இவருக்கு மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அவ்வளவாக அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். இவ்வாறான நிலையிலேயே அகந்தா எனும் தெலுங்கு திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தன்னை விட அவருக்கு இருமடங்கு வயது வித்தியாசம் இருந்த போதிலும் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் பூர்ணா. இதன் மூலமாகவாவது இவருக்கு திரையுலகில் ஒரு திருப்பு முனை அமையும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *