24 வயதில் கோடிக்கணக்கில் சொத்துக்களாக வாங்கி குவிக்கும் கார்த்தி பட நடிகை! 10 படத்திலேயே நம்பர் 1 பணக்காரியாம்.. யார் அந்த நடிகை..!!

திரையரங்கம்

சமீப காலமாக நடிகர்களை விட இளம் நடிகைகள் சொத்துகளை வாங்கிக் குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். படத்திற்கு படம் சம்பளத்தை ஏற்றுவதிலும் கவனமாக இருக்கின்றனர். அந்த வகையில் 24 வயது இளம் நடிகை வெறும் 10 படங்களிலேயே பல கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கிக் குவித்து விட்டாராம்.

மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா. அடிப்படையில் கன்னட நடிகையாக இருந்தாலும் தெலுங்கு சினிமா இவரை  விரித்து அழைத்து அணைத்துக் கொண்டது.

தன்னுடைய குறும்புத் தனமான செய்கைகளால் தெலுங்கு ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டார் ரஷ்மிகா மந்தனா. எனினும் தமிழில் ஒரு படம் கூட ரஷ்மிகா நடிப்பில் வெளியாகவில்லை. ஆனால் தமிழகத்தில் ரஷ்மிகாவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இப்படி நாளுக்கு நாள் தன்னுடைய புகழை வளர்த்துக் கொண்டே செல்லும் ரஷ்மிகா மந்தனா படத்திற்கு படம் தன்னுடைய சம்பளத்தையும் தலா 2 கோடியாக உயர்த்தி வருகிறாராம். தற்போது தெலுங்கிலிருந்து இந்திக்கு சென்றிருக்கும் ரஷ்மிகா மந்தனா சித்தார்த் மல்கோத்ரா என்பவருடன் மிஷன் மஞ்சு என்ற படத்திலும், அமிதாப் பச்சனுடன் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படங்களில் வந்த சம்பளத்தை வைத்து மும்பையில் ஒரு முக்கிய குடியிருப்பில் வீடு வாங்கி விட்டாராம். ஏற்கனவே ஹைதராபாத்தில் பல கோடி மதிப்பிலான வீடுகள் இருக்கும் நிலையில் கர்நாடகாவிலும் ரஷ்மிகா மந்தனாவுக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கின்றன.

இந்நிலையில் தமிழில் சுல்தான் படத்திற்கு பிறகு தளபதி 65 பட வாய்ப்பு கிடைத்தால் சென்னையிலும் பல கோடி மதிப்பில் வீடுகள் வாங்க திட்டமிட்டுள்ளாராம். 24 வயதில் இந்த பொண்ணு சொத்து குவிப்பதில் இவ்வளவு உஷாராக இருக்கிறதே என சினிமா வட்டாரமே பிரமித்து பார்க்கிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *