ஆனந்தம் படத்தில் நடித்த குட்டி பாப்பா யார் தெரியுமா? அந்த படத்தில் நடித்த பிரபல நடிகரின் உண்மையான மகளாம்… யார் தெரியுமா??

திரையரங்கம்

கடந்த 2001-ல் தமிழில் வெளிவந்த ஒரு குடும்பத் திரைப்படம் “ஆனந்தம்” இந்தப் படம் லிங்குசாமி இயக்கத்தில் ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது… இப்படத்தில் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கனேஷ் மற்றும் ஸ்ரீ் வித்யா ஆகியோர் நடித்திருந்தனர்…

மேலும் இப்போது வரை, கூட்டுக் குடும்ப கதை என்றாலே முதலில் மனதில் வந்து நிற்பது இந்தப்படம் தான். இப்போது கூட விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும், பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையின் கரு.. இந்த திரைப்படம் தான்.

தம்பிகளுக்காக மட்டுமின்றி குடும்பத்திற்காகவும் தனது சந்தோஷத்தை தூ க்கிப் போட்டு வாழ்பவரும், அவருக்காக தன் உயிரையும், காதலையும் தியாகம் செய்ய துணியும் தம்பிகளும் என கதை இப்போது வரை எல்லோர் மனதிலும் பேசும் ஒரு படம்.. அதிலும் குறிப்பாக, தேவயாணிக்கும் ரம்பாக்கும் நடுவில் வரும் ச ண்டைகள் எல்லாம் பெரிதாக பேசப்பட்ட காட்சிகள்.

அதில் முரளி ரம்பா தம்பதியர்க்கு ஒரு பெண் குழந்தை இருக்கும். அந்த குழந்தை யார் தெரியுமா அட வேற யாரும் இல்லை. அந்தப் படத்தில் நடித்திருந்த நடிகர் அப்பாஸ் அவரின் உண்மையான மகளாம்.

இதுவரை வெளியில் வராத தகவலை, நடிகை ரம்பா சமீபத்தில் ஆனந்தம் படத்தில் நடித்திருந்த தன் காட்சிகளை பதிவிட்டு, நான் அந்த நாட்களை ரொம்ப மிஸ் செய்கிறேன் எனவும் பின் அந்த சின்ன குழந்தை, அப்பாஸ் மகள் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இப்போது அப்பாஸ் மகளுக்கு வயது 21 ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

மேலும் அந்தப் படத்தின் கதையே தன் தம்பி குழந்தையை, தன் அண்ணன் தன் குழந்தையை பார்ப்பது போல் பார்ப்பது தான்.. அதுவே உண்மையாகியுள்ளது. இத்தனை வருடங்களுக்கு பின் அந்தப் பதிவை பலரும் பார்த்து அந்த குழந்தையின் இப்போதைய புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *