
தமிழ் சினிமாவில் கட ந்த சில மாதங்களுக்கு முன் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருந்தது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மேலும் வெளிநாட்டில் முரட்டு விளையாட்டான குத்துச்சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது . மேலும் இந்த படத்தில் நடிகர் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிகவும் சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகின்றது.
அப்படி இந்த படத்தில் மக்கள் கொண்டாடும் வே டத்தில் ஒருவர் வேம்புலி மற்றும் டான்சிங் ரோஸ் .மேலும் இந்த படத்தில் ஆண் கதாபாத்திரத்திற்கு இணையாக பெண் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் பசுபதியின் மனைவியாக நடித்துள்ள கீதா கைலாசம் பற்றி பலர் அறிந்திராத ஒரு உண்மை.
தமிழ் திரையுலகின் இயக்குனர் சிகரம் என்று ஒரு புகழப்படும் கே.பாலச்சந்தர் அவர்களின் மகன் கைலாசத்தின் மனைவி தான் கீதா கைலாசம். மேலும் சிறந்த எழுத்தாளரான கீதா கைலாசம் நடிகையாகவும் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ளார் . மேலும் இவர் தயாரிப்பாளராகவும் பல்வேறு மேடை நாடகங்களை அரங்கேற்றி உள்ளார்.
மேலும் இதன் பின்னர் இவரது கணவர் இறந்த பிறகு அவர் நடத்தி வந்த மின்பிம்பங்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. இயக்குனர் கே.பாலச்சந்தர் கூட இவர் நடிக்க விரும்பினார் . ஆனால் இதை பற்றி யாரும் கேட்டது கூட இல்லையாம்.
மேலும் மேகா , முப்பரிமாணம் , டார்லிங் போன்ற பல திரைப்படத்தில் நடித்த நடிகை சிருஷ்டி டாங்கே அவர்களின் தாயார் தான் கீதா கைலாசம் என்பதும் குறிப்பிடத்தக்கது . இதோ இவரின் குடும்ப புகைப்படம் …
Leave a Reply