தற்போது ஏராளமான திரைப்பட பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றார்கள். அந்த வகையில் தற்போது பிரபல மலையாள இயக்குனர் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் கே.எஸ். சேதுமாதவன். இவரும் மலையாள மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில்
கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் குறிப்பாக தமிழில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளிவந்த நாளை நமதே என்ற திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ். சேதுமாதவன் தான் இயக்கியுள்ளார்.
மேலும் அந்த திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த நம்மவர் இந்த ஒரு திரைப்படத்தின் இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் 4 பிலிம்பேர் விருதுகளையும் 9 கேரள அரசின் மாநில விருதுகளையும் ஒரு நந்தி விருதையும் பெற்றுள்ளார். இப்படி ஒரு நிலையில் இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவனின் வயதான காரணத்தால் இன்று காலமானார். இவருக்கு கிட்டதட்ட வயது 90 ஆகின்றது.
மேலும், இவர் இந்திய சினிமாவில் முன்னணி பழம்பெரும் இயக்குனராக வலம் வந்தவர். மேலும், இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்…