தமிழ் சினிமாவில் தான் மற்ற சினிமாக்களை விட அதிகமாக வேற்று மொழி நடிகைகள் நடித்து வருகின்றார்கள். அப்படி 90களில் இருந்தே தான் அதிகமாக மற்ற மொழி நடிகைகளை எல்லாம் தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றார்கள். இப்படி கேப்டன் விஜயகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ராஜ்ஜியம்,
இந்த திரைப்படம் கடந்த 2002 ஆண்டு வெளி வந்தது. இந்த படம் மூலமாக தமிழில் அறிமுகமான நடிகை தான் நடிகை பிரியங்கா திரிவேதி. பெங்காலி நடிகையான இவர் மாடலிங் துறையில் இருந்து வந்ததால் தமிழில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்து இருந்தது. சிறு வயதில் இருந்தே சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட இவர் இதுவரை பெங்காலி, ஹிந்தி, தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
இப்படி இந்த திரைபடங்களில் நடித்ததன் மூலமே தல நடிப்பில் வெளியான ராஜா திரைபப்டத்தில் நடிக்க இவர்க்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் அடுத்து நடிகர் விக்ரமுடன் சேர்ந்து சடுகுடு திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் அதிகமாக் வாய்ப்புகள் எல்லாம் கிடைக்காமல் போகவே சினிமாவினை ஓரங்கட்டி விட்டு திருமணம் செய்து கொண்டார். இப்படி இவர் திருமணம் செய்துகொண்டது கன்னட சூப்பர் ஸ்டாரான உபேந்திராவை தான். அவர் கன்னட சினிமாக்களில் சில காலம் நடித்து வந்த வேளையில் தான் இருவருக்குமே காதல் ஏற்பட்டு திருமணம் வரை சென்று இருக்கின்றார்கள்.
இவர்கள் கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இப்படி திருமணம் செய்து கொண்டு இவருக்கு இரண்டு குழந்தை உள்ளது. அனால் இன்று வரை இவரது கணவர் உபேந்திரா என்பது பலருக்கும் தெரியாது.