நடிகை ஸ்ரீ தேவியை திருமணம் செய்ய ம றுத்த பிரபல முன்னணி நடிகர்!! விஷயம் கேட்டு அ திர்ச்சி அடைந்த குடும்பத்தினர்.. என்ன காரணம் தெரியுமா?

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கட்டத்தில் ஒருசில ஜோடிகள் பெரிதாகப் பேசப்படுவார்கள். திரையில் இவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதால் நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என பல ரசிகர்கள் எதிர்ப் பார்ப்பது உண்டு.

தமிழ் சினிமாவில் வசீகர ஜோடியான கமல், ஸ்ரீதேவி இருவரும் இணைந்து 24 படங்கள் நடித்துள்ளார்கள். இவர்கள் இருவரும் முதலில் ஜோடி சேர்ந்த படம் மூன்று முடிச்சு. அதன் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் நடித்திருந்தார்கள்.

சகலகலா வல்லவன், வறுமையின் நிறம் சிகப்பு , சின்னஞ்சிறு வயதில், சிகப்பு ரோஜாக்கள், வாழ்வே மாயம், மூன்றாம் பிறை என பல படங்களில் கமல், ஸ்ரீதேவி இருவரும் இணைந்து நடித்த சூப்பர் ஹிட் படங்களை தந்துள்ளார்கள். அந்த காலகட்டத்தில் கமலும், ஸ்ரீதேவியும் காதலிப்பதாக பல வதந்திகள் வந்தது.

ஆனால் இவற்றைப் பற்றி பெரிதாக கண்டுகொள்ளாத கமலும், ஸ்ரீதேவியும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் சினிமா வட்டாரத்தில் இவர்கள் மீது அதிகமாக கிசுகிசுக்கள் வர தொடங்கியது. அப்போது ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரி, ஸ்ரீ தேவியை திருமணம் செய்து கொள்ளுமாறு கமலிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதற்கு கமல், 13 வயதில் இருந்து ஸ்ரீதேவியுடன் பழகி வருகிறேன், ஸ்ரீதேவி என்னை சார் என்று தான் கூப்பிடுகிறார். நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன். ஸ்ரீதேவியை என் தங்கையா தான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். பலமுறை ஸ்ரீதேவியின் அம்மா வற்புறுத்தியும் கமல் ஸ்ரீதேவியை திருமணம் செய்ய மறுத்துவிட்டாராம்.

அதுக்கு பின் ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். நிஜத்தில் கமலும், ஸ்ரீதேவியும் ஜோடி சேராவிட்டாலும் காலத்தால் அழியாத ஜோடிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *