செம்பருத்தி ஷபானா செழியனை தொடர்ந்து அடுத்து திருமணம் செய்து கொள்ளப் போகும் ராஜா ராணி-2 சீரியல் பிரபலங்கள்.. யார் அந்த ஜோடி தெரியுமா??

தொடர்ந்து சின்னத்திரை சீரியல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறிவரும் சம்பவம் அண்மைக் காலமாகவே அரங்கேறி வருகிறது. அந்த விதமாக சில வருடங்களாக பல சீரியல் ஜோடிகள் நிஜ ஜோடிகள் ஆக மாறி வருகின்றன.

மேலும் இந்நிலையில் சமீபத்தில் தங்கள் காதலர்களை கரம் பிடித்து திருமண பந்தத்தில் இணைந்த ஸ்டார் ஜோடிகள் ஆரியன்  ஷபானா மற்றும் மதன்  ரேஷ்மா. ஜீ தமிழ் சேனலின் சீரியல் நடிகர் நடிகைகளுக்கு ஒரே திருமண வைபோகம் தான்.

சமீபத்தில்தான் ‘கோகுலத்தில் சீதை’ நடிகை வைசாலி தனிகா தன் காதல் கணவன் சத்ய தேவை கரம் பிடித்த நிலையில் மேலும் செம்பருத்தி சீரியல் இன் கதாநாயகி ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆரியனை கரம் பற்றினார். அதேபோல் பூவே பூச்சூடவா சீரியல் இன் கதாநாயகி, அதே சீரியலில் தன்னுடன் நடித்த சக நடிகரான மதனை காதலித்து கரம் பற்றி உள்ளார்.

இவ்வாறு பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகள் ஆகி வந்த நிலையில் மற்றுமொரு நட்சத்திர ஜோடி திருமணத்தில் இணையப் போகிறார்கள். அதாவது கலர்ஸ் தமிழ் சேனலில் ‘திருமணம்’ சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா. இவர்கள் சீரியலில் நடிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர்.

அதையும் வெளிப்படையாக பல ரியாலிட்டி ஷோகளிலும் இணையதளத்திலும் பகிர்ந்து வந்தனர். சித்து தற்போது விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் கதாநாயகனாக சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். சித்துஸ்ரேயா காதல் ஜோடி ரேஷ்மா மதன் திருமணத்திற்கு ஒன்றாக சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இவர்கள் மதன் ரேஷ்மா தம்பதியினருடன் ஜோடியாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வை ரலாகி ரசிகர்களின் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.

அதிலும் அடுத்த திருமணத்திற்கு தயாராகிவரும் ஸ்டார் ஜோடிகள், சித்து மற்றும் ஸ்ரேயா என்று ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடாமல் உள்ளனர் ஸ்ரேயா மற்றும் சித்து தரப்பினர்.

மேலும் நீண்ட நாட்களாக காதலர்களாகவே இருந்து வரும் நட்சத்திர ஜோடிகளான ஸ்ரேயா மற்றும் சித்து, கூடிய விரைவில் தங்கள் திருமணத்தை அறிவிப்பார்கள் என ரசிகர்கள் தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*