பாக்கியா மற்றும் ராதிகாவை விட அழகில் மிஞ்சும் கோபியின் நிஜ மனைவி.. அட இவர் நடிகையாச்சே!! வெளியான புகைப்படம் இதோ..!!

திரையரங்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த சீரியலுக்கு டிஆர்பியில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கோபி கதாபாத்திரம் தான்.

பாக்கியலட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் சதீஷ். இவர் ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நடித்து அதன் பின், பல தொடர்களில் நடித்துள்ளார். பாக்யலட்சுமி தொடரின் மூலம் தான் இவர் மிகவும் பிரபலமானார். இத்தொடரில் கோபி கதாபாத்திரத்திற்கு ஒரு அழகான குடும்பம் இருந்தும், அவர் வேறு ஒரு பெண்ணை விரும்புவது போல் காட்டப்படுகிறது.

இதனால் பாக்கியலட்சுமி ரசிகர்கள் இவரை தி ட்டி வருகிறார்கள் . இப்படிபட்ட ஒரு ரோலில் நடித்து வரும் சதீஷ் நிஜ வாழ்கையில் செம ஜாலியான டைப் என்று அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்புகளுக்கு தெரிந்திருக்கும். சீரியலில் மனைவி பாக்கியா இருக்க ராதிகா மீது ஆசைப்படும் இவரின் நிஜ மனைவி யார் தெரியுமா.

பிரபல மலையாள நடிகை கீதா விஜயன் தான் சதீஷின் உண்மையான மனைவி. கீதா விஜயன் 150க்கு மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் விஜயகாந்த் நடித்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு காஞ்சிவரம், விடியும் வரை காத்திரு, ஆதார் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது கீதா விஜயன் மலையாள தொடர்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *