சூப்பர் சிங்கர் புகழ் மாளவிகா கடந்த சில வாரங்களுக்கு முன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தகவல் வெளியிட்டார். அவர் அந்த சந்தோஷ செய்தி கூறியதில் இருந்து பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.
மேலும் அண்மையில் மாளவிகா ரசிகர்களுடன் வீடியோ சாட் செய்துள்ளார். அதில் ஒருவர் உங்களது கணவர் உங்களை விட வயது குறைவானவரா என கேட்டிருந்தார். அதற்கு மாளவிகா, என்னை விட அவர் ஒரு வருடம் இளையவர் அவருக்கு முப்பத்தி இரண்டு வயது ஆகிறது என்று கூறியிருக்கிறார்.
பெண்ணை விட பையன் வயது அதிகமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை பி ரச்சினை கிடையாது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் காதலிக்க வேண்டும் மரியாதை கொடுக்க வேண்டும் அவ்வள வுதான் என்று கூறியிருக்கிறார்.