3வது முறையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை முல்லை மாற்றம்.. என்ட்ரி கொடுக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. யார் அந்த பிரபலம் தெரியுமா??

திரையரங்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். மற்ற சீரியல்களை ஒப்பிடுகையில் இந்த தொடரில் சகோதரத்துவம், ஒற்றுமை, கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவம் போன்றவற்றையெல்லாம் மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

மேலும் தெலுங்கில் வடிநம்மா என்றும், கன்னடத்தில் வரலக்ஷ்மி ஸ்போட்ஸ் என்றும், அதே போல் தமிழில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பெயரும் ஒளிபரப்பாகி வருகிறது. இது போன்று இந்தியாவில் மட்டும் இந்த கதை 8 மொழிகளிலும் மற்றும் இலங்கையிலும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தற்போது நான்கு ஜோடிகள் இருந்தாலும், ஆரம்பம் முதல் முல்லை- கதிர் ஜோடி ரசிகர்களை வெகுவாக க வர்ந்தது. இந்த முல்லை கதாபாத்திரத்தில் முன்பு விஜே சித்ரா நடித்து வந்தார்கள்.

ஆனால் அவர்களது ம றைவிற்குப் பின்னர் பாரதி கண்ணம்மா என்னும் சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் இவரின் நடிப்பிற்கு பல விமர்சனங்கள் வந்தாலும் தற்போது இவரின் நடிப்பு திறமையால் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது.

மேலும் இந்நிலையில் இவர் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வி லகப் போவதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மக்களிடையே சற்று க லக்கத்தை உண்டு செய்துள்ளது. இவரின் இந்த தி டீர் முடிவுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை காவியா அறிவுமணிக்கு, நயன்தாரா விக்னேஷ் சிவன் மற்றும் கவின் இவர்களின் தயாரிப்பில் ‘ஊர்க்குருவி’ என்னும் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் கவின் உடன் இணைந்து நடிக்க இவர் கமிட் ஆகியுள்ளாரம். இந்த திரைப்படத்தில் இன்னும் சில முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நடிகை காவியா அறிவுமணிக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை தர்ஷா குப்தா,

சன் டிவியில் ஒரு சில சீரியல்களிலும், விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்ற சீரியலில் வி ல்லியாக நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *