நடிகைகள் இப்பொழுது புல்லட் ஓட்டுவதையே பெருசாக பேசுகிறார்களே… ஆனால் அந்த காலத்திலேயே ராயல் என்ஃபீல்டு ஓட்டியுள்ள நடிகை!! யார் தெரியுமா??

பொதுவாக் இன்று அனைத்து வயது நடிகைகள் மற்றும் நடிகர்கள் இருவருமே பைக் ஓட்டுவது பெரிய விஷயமல்ல. சமூக வலைதள பக்கத்தில் பைக் ஓட்டுவதே ஒரு பெரிய ட்ரென்ட்ஆக மாறிவிட்டது. மேலும் இப்போது அப்படி தமிழ் நடிகைகள் ஏதாவது ஒரு வண்டியை ஓட்டி விட்டால் அதனை பெரிதாக சமூக வலைதளத்தில் பேசி ட்ரண்ட் செய்து விடுவார்கள்.

அந்த வகையில் சமீபகாலமாக பல நடிகைகள் புல்லட் ஓட்டுவதை நாம் பார்த்திருப்போம். அப்படி அந்த காலத்திலேயே மிக பெரிய ஒரு புதுமை பெண்ணாக இருந்து வந்தவர் கே ஆர் விஜயா. அப்படி அந்த காலத்திலேயேசினிமாவில் ஆண்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய முதல் நடிகையாக இருந்தார்.

தென்னிந்திய சினிமாவில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரமிக்க வைத்தவர் அதுமட்டுமில்லாமல் அனைத்து முக்கியஸ்தர்களிடமும் பணியாற்றி விட்டார் கே ஆர் விஜயா அவர்களுடன் பல திரைப்படத் தொழிலாளர்கள் நடித்துள்ளார்கள். அப்படி இருந்து வந்த காலத்திலேயேஅதே சினிமாவில் நடித்து தனக்கு சொந்தமாக கப்பல் தனி விமானம் சொகுசு பங்களா என சர்வ வசதிகளையும் கொண்ட ஒரு நடிகையாக இருந்தார் அந்த நடிகை.

இந்த காலத்தில் பல நடிகைகள் பல கொடிகள் சம்பளம் வாங்கி ஹீரோக்களுக்கு இணையாக நடித்து வரலாம். மேலும் இவர் சினிமாவில் ஜொலித்தது மட்டுமல்லாமல் தனியாக ஜெட் வைத்த முதல் நடிகை இவர்தான்.

ஆனால் அந்த காலத்திலேயே நடிகர்களுக்கு இணையாக சம்பளம் கூட நடிகைகளுக்கு கிடைக்காது, அப்படி இருந்த காலத்தில் இதெல்லாம் செய்து கட்டிய நடிகை தான் கே.ஆர்.விஜயா. இப்போது இருக்கும் நயன்தாராவை போல பல மடங்கு அந்த காலத்தில் ரசிகர்களையும் சம்பளமும் வைத்து இருந்தார்.

முன்னணி நடிகர்கள் இளம் நடிகர்கள் என்றெல்லாம் பார்த்து நடித்து கொடுக்காமல் தனக்கு கதாபாத்திரம் சிறப்பாக இருந்தால் யாராக இருந்தாலும் நடித்து வந்தவர். சினிமாவில் இருந்து கொஞ்சம் இடைவெளி விட்டு இருந்தவர் 1966ஆம் ஆண்டு தொழிலதிபரான சுதர்சன் வேலாயுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரே நேரத்தில் தொழிலதிபராகவும் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வந்தவர்.

இந்த தம்பதிகளுக்கு ஹேமலதா என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய இளைஞர்கள் ஓட்ட ஆசைப்படும் ராயல் என்ஃபீல்டு பைக் அந்த காலத்திலேயே நடிகை கே ஆர் விஜயா ஓட்டியுள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*