சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் அனைவருமே வந்து சாதித்து விட முடியாது, அப்படி பலருக்கும் வாய்ப்புகளும் கிடைத்து விடுவது இல்லை. பல இளைஞர்கள் இன்று தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு நடிகராக திரையில் வர வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இருந்து வருகின்றனர்.
அப்படிபட்ட சிலரில் ஒருவர் தன் அங்காடி தெரு நடிகராக வந்த மகேஷ். புது முகங்களை மட்டுமே வைத்து படம் இயக்கி கொண்டு இருக்கும் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மகேஷ். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இருந்து வந்தவர் ஒரே படத்தில் பலருக்கும் பெயர் சொன்னதும் பரிட்சயம் ஆகும் அளவிற்கு பிரபலமாகி இருக்கின்றார்.
இந்த திரைபடத்தில் நடித்து இருந்த அஞ்சலி மற்றும் இவரின் ஜோடி மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இவர் அதற்கு பின்பு ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் அந்த திரைப்படங்கள் பெரிதாக ஒன்றும் கைகொடுக்கவில்லை. ஆனாலுமே அதனை பற்றி யோசித்து மனம் தளர விடாமல் அடுத்து அடுத்து சிறு படங்களில் நடித்து கொண்டிருந்த இவருக்கு கடந்த சில வருங்களாகவே சினிமா வாழ்க்கை சரிவிலேயே சென்றது.
இப்படி நீண்ட நாட்கள் பட வாய்ப்பில்லாமல் இருந்த மகேஷ் தி டீரென தேனாம்பேட்டை என்ற திரைப்படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின. அதனை அவரும் உறுதிபடுத்தும் வகையில் அவரும் ஒரு படத்தினை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த போட்டோவினை பார்த்த பல ரசிகர்களுமே ஆ ச்சர்யபட்டு இருக்கின்றார்கள். தமிழ் சினிமாவில் நன்றாக நடித்து வெற்றிநடை போடும் நடிகர்களே நடிக்க யோசிக்கும் ஒரு கதாபாத்திரத்தினை நடிக்க இருக்கின்றார். தமிழ் சினிமாவில் அப்படி பல நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்திருக்கும் நிலையில் அங்காடி தெரு மகேஷ் முதன் முதலாக பெண் வேடத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் இது.
இந்த படத்தினை பற்றி படத்தின் இயக்குனர் கூறியது என்னவென்றால், ஆம் இந்த படத்தில் அவர் ஒரு திருநங்கை கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருக்கிறார. அந்த கதாபாத்திரம் ஊரில் இருக்கும் அனைவரிடமும் அ.டி.வா.ங்கி கொண்டு இருக்கும் கதாபாத்திரம் எனவும் விரைவில் பட வேலைகள் முடிந்துவிடுமேனவும் கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது