சன்டிவி சீரியல் முன்னணி நடிகைக்கு துபாய் மாப்பிள்ளையுடன் விரைவில் திருமணம்!! அவர் யார் தெரியுமா? அட இவரா என ஆ ச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

ஹிந்தி சீரியலான நாகினி, தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு அதன் முதல் பாகம் ஆனது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த சீரியலில் கதாநாயகி நாகினியாக ஷிவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மௌனி ராய் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமானார்.

குறிப்பாக இந்த சீரியலில் காதல் காட்சிக்கும், ரொமான்ஸுக்கும் ப ஞ்சம் இல்லாததால் இளவட்டத்தின் இஷ்டமான சீரியலாக மாறியது. அதன் பிறகு நாகினி தொடரின் பல பாகங்கள் வெளியிடப்பட்டாலும், மௌனி ராய்க்கு கிடைத்த வரவேற்பு நாகினியாக நடித்த மற்ற நடிகைகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

அதன் பிறகு மௌனி ராய் பாலிவுட்டில் சல்மான்கானுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி, வெள்ளி திரையையும் கலக்கினார். இந்த சூழலில் மௌனி ராய் நீண்ட நாளாக கா தலித்த துபாயை சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியாரை விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சுராஜ் சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து தனது உழைப்பின் மூலம் தொழிலதிபர் ஆனது குறிப்பிடத்தக்கது. சுராஜ் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் தான். சுராஜ் மற்றும் மௌனி ராய் திருமணம் வரும் ஜனவரி மாதம் துபாய் அல்லது இத்தாலியில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *