
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் ரோஜா, இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் வாரம் தோறும் வெளியாகும் TRP பட்டியலில் ரோஜா சீரியல் முதலிடத்தில் நிலைத்து வருகிறது.
சன் டிவியில் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ரோஜா. ஓரிரு வாரங்கள் TRPயில் பின்னடைவில் இருந்தாலும், பல வாரங்களாக, பார்க் இந்திய நிறுவனம் வெளியிடும் TRP பட்டியலில் நம்பர் 1 இடத்தில் ரோஜா சீரியல் இடம் பிடித்துள்ளது.
இந்த சீரியலில் கதாநாயகனாக சிப்பு சூர்யன் என்பவர் நடித்து வர, பிரியங்கா என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இவர்களை போல் ரோஜா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காயத்ரி. இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார்.
சீரியல்களில் நீண்ட நாட்களாக நடித்துவரும் ஒரு சில நடிகைகளில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும், இந்நிலையில் நடிகை காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…
Leave a Reply