11 வருடம் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரீ கொடுக்கும் பிரபல நடிகர்!! அவருக்கு லட்டு மாதிரி அமைந்த ஹீரோயின்.. அட இவங்க ஜீ தமிழ் சீரியல் நடிகையாச்சே..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் வலம் வருபவர் தான் டான்ஸ் மாஸ்டர் ஹரிகுமார். இவர் நடன இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது நடிகராக வளர்ந்துள்ளார்.

தூத்துக்குடி மற்றும் மதுரை சம்பவம் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ள ஹரிகுமார் தற்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தை ராம் ஜெய் புரொடக்ஷன்ஸ் சார்பில் சக்தி குமார் தயாரிக்கிறார். ஹரிகுமாருடன் இணைந்து ஜான் விஜய், சக்திகுமார், சுபிக்ஷா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது படம் பூஜையுடன் தொடங்கி உள்ளது. படப்பிடிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  விரைவில் படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இவரை போலவே தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களில் வலம் வரும் பிரபுதேவாவிடம் ஹரிகுமார் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இயக்குனர் அவதாரம் எடுத்த ஹரிகுமார் அவரது குரு பிரபுதேவாவை வைத்தே தேள் என்ற படத்தை இயக்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *