ஹாலிவுட்டில் வாய்ப்பு தேடும் பிரபல தமிழ் பட நடிகை!! அதுவும் அவர் எந்த எல்லைக்கும் செல்ல தயாராம்.. யார் அந்த நடிகை..!!

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமத்து நடிகைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதே போல் திருமணத்திற்கு பின்னர் தான் சமத்து நடிகைக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ச ர்ச்சைக்குரிய அந்த வெப் தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்றதன் மூலம் பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சமத்து நடிகை பிரபலமாகியுள்ளார்.

அந்த வெப் தொடரில் நடிகையின் நடிப்பை பார்த்து ஹாலிவுட்டில் இருந்து சில வாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கசிந்து வருகிறது. நடிகைக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பு மீது தீராத காதல் உள்ளதாம். இதுவரை தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த அவருக்கு தற்போது ஹாலிவுட்டில் கால் பதிக்கும் கனவு உருவாகியுள்ளது.

தனது நடிப்பு திறமை ஒரே இடத்தில் தேங்கி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் நடிகை எப்படியாவது ஹாலிவுட்டில் வாய்ப்பு பெற வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம். அதேபோல் அந்த வாய்ப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயார் எனவும் கூறி வருகிறாராம்.

தற்போது தென்னிந்தியாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் சமத்து நடிகை புகழின் உச்சத்தில் இருக்கிறார். இதன் காரணமாக தனக்கு நிச்சயம் ஹாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்துவிடும் என எண்ணி கொண்டிருக்கிறாராம். சமீபகாலமாக ஹாலிவுட் பிரபலங்களின் டார்கெட் அதிகளவில் தென்னிந்திய நடிகர்கள் பக்கம் சாய்ந்து வருவதால், அவுட் ஆஃப் தி பாக்ஸ் நடிகர்கள் மற்றும் நடிகைகளை தேர்வு செய்து புதிய படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடிக்க வைக்க திட்டமிட்டு வருகிறார்களாம்.

இதை அறிந்த சமத்து நடிகை எப்படியாவது அந்த வாய்ப்பை பிடித்து விடவேண்டும் என முடிவு செய்துள்ளாராம். தென்னிந்தியாவை சேர்ந்த நடிகைகள் பாலிவுட் சினிமாவிற்கு செல்லவே பல சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் அம்மணி ஹாலிவுட் சினிமாவிற்கு செல்ல நேரடியாக முயற்சி எடுத்து வருவது தென்னிந்திய நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சர்ச்சைக்குரிய அந்த வெப் தொடரில் நடித்ததன் மூலம் குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் அம்மணி தற்போது ஹாலிவுட் சினிமாவிற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*