விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக்கு சென்ற கமல்..!! அப்போ பிக்பாஸ் அவ்வளவு தானா என கேட்கும் ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக்கு சென்ற கமல்..!! அப்போ பிக்பாஸ் அவ்வளவு தானா என கேட்கும் ரசிகர்கள்..!!

செய்திகள் திரையரங்கம்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகரராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகிய அனைத்துத் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெறுவதோடு வசூலிலும் அள்ளிக் குவித்திருப்பது தெரிந்ததே. அத்தோடு இவர் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர் என்பதும் தெரிந்ததே. மேலும் இவர் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

அப்படத்தின் படப்பிடிப்பின் ஆரம்பக்கட்டப் படப்பிடிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. அத்தோடு விஜய்டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியினையும் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் அவர் தான் தொகுத்து வழங்க உள்ளார். அந்நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவிலும் கமல் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஷீ தமிழ் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல் கலந்து கொண்டுள்ளார். அந்த குட்டி ப்ரோமோவும் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *