5 வருடங்களாக அ தற்காக கா த்திருக்கிறேன்.. தனது திருமண நாளில் உ ருகி உ ருகி கா தல் கவிதையை வெளியிட்ட பிரபல நடிகை..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவிற்கு செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, அதன் பின் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனிதா சம்பத். இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே பக்கம் பக்கமாக தனது குடும்பத்தினரையும், முக்கியமாக கணவரையும் பற்றி பேசுவார் என்று அனைவரும் அறிந்ததே.

தற்போது தனது இரண்டாம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடும் அனிதா சம்பத், தன்னுடைய கணவரை பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் அனிதா சம்பத், தன்னுடைய கணவன் பிரபாகரன், என்னுடைய வாழ்க்கையில் கடவுள் தனக்கு கொடுத்த மிகப் பெரிய வரம் என்றும், அவர் சிறந்த கணவராக இருப்பது மட்டுமல்லாமல் குடும்பத்தில் நல்ல மகனாகவும், சகோதரனாகவும், மருமகனாகவும் விளங்கும் சிறந்த மனிதன்.

அத்துடன் திருமணத்திற்குப் பிறகு மீடியா பெண்களின் வளர்ச்சி த டைபடும் என்று கூறியபோது, எனக்கு மட்டும் அது எதிர்மாறாக அமைந்தது. என்னுடைய திருமணத்திற்கு பிறகு தான் நான் வளர்ந்தேன். அதற்கு முழு காரணம் பிரபா எனக்கு கொடுத்த நம்பிக்கை, சுதந்திரம் மற்றும் ஊக்கமே. இதற்கெல்லாம் கைமாறாக என்னிடம் கொடுக்க காதலைத் த விர வேறு எதுவும் இல்லை.

எனவே நம் காதல் போல் நாமும் வளர்வோம் என்று கூறியதுடன் தனது கணவர், ஐந்து வருடங்களில் தன்னிடம் இதுவரை ஐ லவ் யூ சொல்லவில்லை என்பதால் அதற்காக காத்திருக்கிறேன்.

தங்களது 61-ஆவது மாத காதல் ஆண்டுவிழா சீக்கிரம் வரவிருப்பதால், அப்பொழுது சொல்வார் என்று எதிர்பார்ப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிதா சம்பத் வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *