
திருமணமான திரையுலக பிரபலங்களை வைத்து மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி Mr. And Mrs சின்னத்திரை. இரண்டு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் மொத்தம் 12 ஜோடிகள் கலந்து கொண்டனர். அதில் இதுவரை மூன்று ஜோடிகள் எலிமிஷன் மூலம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். இந்த 12 ஜோடிகளில் ஒரு ஜோடியாக கலந்துகொண்டவர்கள் தான், மணி மற்றும் சோபியா. இவர்கள் இருவரும் திரையுலகில் பிரபலமானவர்கள்.
சில வாரங்களாக நிகழ்ச்சியில், மணி மற்றும் சோபியா இருவரும் பங்கேற்றுக்கொள்ளவில்லை. இதனால், ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்க துவங்கிவிட்டனர். இந்நிலையில், சோபியாவின் உட ல் நல கு றைவு காரணமாக தான், இருவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொள்ளவில்லை என்று சோபியா கூறியுள்ளார்.
மேலும், Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேறி இருக்கிறோம், என்று கூறியுள்ளார். விரைவில் வைல்ட் கார்ட் எபிசோடில் ரீ என்ட்ரி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார் சோபியா.
Leave a Reply