தமிழ் சினிமாவில் இப்போது குழந்தையாக நடித்து வருபவர்கள் எல்லாம் அதே சின்னத்திரை பக்கம் வந்து கதாநாயகியாக நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் கோல்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் என்றுமே தனியாக ஒரு இடத்தினை எப்படியாவது பிடித்து விடுவார்கள்.
பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித் குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
அப்படி தமிழில் வெளியான தீரன் அதிகாரம் இன்று படத்தில் அறிமுகமானவர் ரவீனா தாஹா. அந்த திரைபடத்ஹில் பெரிய அளவில் பிரபலமாக ஆகவில்லை என்றாலுமே அடுத்து நடித்த ராட்சசன் திரைப்படம் அதற்கும் சேர்ந்து பெயரினை சம்பாதித்து கொடுத்தது.
பல மீம்சுகள், வீடியோக்கள் பறந்தன. அந்த கதாபாத்திரம் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. அதே போல இந்த படத்தில் அம்மு அபிராமியின் பள்ளித் தோழியாக நடித்தவர் நடிகை ரவீனா தாஹா. மேலும், ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் கூட இவர் தான் நடித்திருந்தார்.
இப்போது திரைப்படங்களை விட அதிகமாக சீரியல் பக்கம் தோன்றி வரும் இவர், ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து வருகிறார். அதே போல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மௌன ராகம் 2’ தொடரில் நடித்து வருகிறார்.
முதல் சீசனை போல இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லாக் டவுன் காரணமாக நிறுத்தப்பட்ட இந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் இப்போது விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
மேலும் சமீபத்தில் அது தொடர்பான ப்ரோமோவும் வெளியானது. இதில் சக்தி யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று ஒரு புறம் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தாலும் உண்மையில் 17 வயது ஆகும் ரவீனாவிற்கு திருமணமா, அப்போ இது குழந்தை திருமணம் தானே என்று பலர் கேலி செய்து வருகின்றனர்.