நிச்சயம் முடிந்த நிலையில்.. முன்னாள் முதல்வரின் பேரனுடனான திருமணத்தை உதறி தள்ளிய தனுஷ் பட நடிகை!! காரணம் என்ன தெரியுமா?

திரையரங்கம்

தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தின் நடிகை அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட முன்னால் முதல்வரின் பேரனுடனான திருமணத்தை உ தறி தள்ளி இருக்கிறார். தமிழ் சினிமாவின் பல முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் பட்டாஸ்.

இந்த படம் கலவையான விமர்சனங்கள் பெற்று ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்தது. அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்து இருந்தார் . புதுப்பேட்டை படத்துக்கு பின் 13 ஆண்டுகள் கழித்து தனுஷ்  சினேகா ஜோடி இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள்.

மேலும் இந்த படத்தில் நடித்த அனைவரும் பலருக்கும் பரிட்சயமான முகங்கள் தான் நடித்து இருந்தனர். இவர்களுக்கு நடுவில் பரிச்சயம் இல்லாத முகமாக இந்த படத்தில் நடித்து இருந்தார் கதாநாயகி. அப்பா தனுஷ் ஜோடியாக ஸ்னேகாவும் மகன் கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ் ஜோடியாக மெஹ்ரின் பிர்சடா என்பவர் நடித்திருந்தார்.

இவர் தமிழுக்கு ஒன்றும் புது முகம் கிடையாது. இவர் ஏற்கனவே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். பட்டாஸ் படத்தினை நடித்து முடித்து மீண்டும் பல தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த வந்த போது அதன் பிறகு எந்த ஒரு படங்களுமே நடிக்கவில்லை.

மேலும் அந்த படத்திற்கு பின்னரும் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு அமையவில்லை. இந்த நிலையில் ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோய் என்பவருடன் கடந்த மார்ச் மாதம் திடீர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இப்படி ஒரு நிலையில் பவ்யா பிஷ்னோவை திருமணம் செய்ய போவது இல்லை என்றும் தனக்கும் அவருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *