54 வயதிலும் பயப்படும் நடிகை! கமலுடன் நடிக்க ஓகே ஆனா சில கண்டிஷன்.. எதற்காக தெரியுமா?

தேர்தல் இந்தியன் 2 போன்ற பல ப ஞ்சாயத்துக்களில் இருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதியடைந்து பெருமூச்சு விட்டு வருகிறார் கமலஹாசன். அடுத்தடுத்து படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ், கமல் படம் தான் முதலில் தொடங்கும் என செய்திகள் வெளிவந்தன. ஆனால் அதற்கு முன்பே பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்து விடலாம் என கூறியுள்ளாராம் கமல்ஹாசன்.

மலையாளத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் தான் பாபநாசம். திரிஷ்யம் 2 படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் அந்த படத்தை தமிழில் பாபநாசம் 2 என்ற பெயரில் ரீமேக் செய்ய பல நாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது.

இடையில் அரசியல் குளறுபடிகள் இருந்ததால் தள்ளிச் சென்ற படத்தை ஒரே மாதத்தில் முடித்து விடலாம் என கணக்குப் போட்டுள்ளாராம் கமல் ஹாசன். ஆனால் போன படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கௌதமி இந்த முறை அவருடன் ச ண்டை போட்டுக் கொண்டு சென்றதால் நடிகை நதியாவை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இத்தனை கால சினிமா வரலாற்றில் கமல் மற்றும் நதியா இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. இருந்தாலும் நதியா கமலுடன் நடிக்க சில கண்டிஷன் போட்டுள்ளாராம். அதிலும் குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகளில் முத்தக்காட்சி சுத்தமாக இருக்க கூடாது எனவும், கட்டிப்பிடிக்கும் காட்சிகளை கூட தவிர்த்து விடுங்கள் எனவும் கூறியுள்ளாராம்.

போற போக்க பார்த்தா, ஆண்டவர் பழையபடி பூஜாகுமார கூட்டிட்டு வர போறாரு பாருங்க. கமல்ஹாசனுக்கும் நடிகைகளுக்கும் எப்போதுமே ஒரு சமரசம் உண்டு என்பது தெரிந்த விஷயம் தான்.

இருந்தாலும் இந்த வயதிலும் கமலஹாசனை பார்த்து பயப்படுவது கொஞ்சம் ஓவர் தான் என்கிறது சினிமா வட்டாரம். இதே நதியா தான் தெலுங்கில் வெளியான திரிஷ்யம் ரீமேக்கில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*