நாங்க மனசளவுல எப்பவோ கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. விரைவில் தொழிலதிபரை மணக்கிறார் இளம் நடிகை! அதைக் கேட்டதும் அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

மனதளவில் நாங்கள் திருமணம் செய்து கொண்டாலும், காதலரை இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார். பிகினி புகைப்படங்களின் குயின் என்கிறார்கள். ஷாமா சிக்கந்தரை. தினமும் இன்ஸ்டாவில் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிடுவதில் இவர் ரொம்ப பிசி.

இந்தியில், மன், அன்ஸ்: த டெட்லி பார்ட், த கான்ட்ராக்ட், பைபாஸ் ரோடு உட்பட சில படங்களில் நடித்துள்ளார் இவர். ரியாலிட்டி ஷோ கிளாமர் இல்லாமல் இவர் நடிக்கும் படங்கள் இல்லை. ஓவர் கிளாமரில் மிரட்டும் நடிகைகளில் இவரும் ஒருவர். டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

சின்னத்திரை நடனம் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ள இவர், வெப் சீரிஸ் மற்றும் இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறார். சிங்கக் குட்டி தற்போது துபாயில் இருக்கிறார், ஷாமா. அங்கிருந்து தினமும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் சிங்கக் குட்டிக்கு அவர் புட்டிப்பால் கொடுக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அந்தச் சிங்கக் குட்டி, அவர் மடியில் அழகாக உட்கார்ந்து இருந்தது. ஆஹோ ஓஹோ இந்நிலையில், இப்போது கிளாமர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கு கேப்ஷனாக, நீங்கள் எப்படி இருக்குறீர்கள் என்பது முக்கியமல்ல. உங்களை கருணை, உலகின் அழகான நபராக மாற்றுகிறது என்று கூறியுள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ் அவரை ஆஹோ ஓஹோவென புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

ஜேம்ஸ் மில்லிரான் இதற்கிடையே, தொழிலதிபர் ஜேம்ஸ் மில்லிரான் என்பவரைக் காதலித்தார். அமெரிக்க தொழிலதிபரான இவருக்கும் ஷாமாவுக்கும் துபாயில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது

மனதளவில் திருமணம் ‘நாங்கள் எப்போது சந்தித்தோமோ, அப்போதே மனதளவில் திருமணம் செய்துவிட்டோம். மற்ற ஜோடிகளை போல் அல்ல நாங்கள். இந்த வருடம் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். அது நண்பர்களுக்கான பார்ட்டிக்காகத்தான். நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்’ இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *