நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி! 19 வருடத்திற்கு பின் எங்களுக்கு கடவுள் தந்த பரிசு!! மனம் நெகிழ்ந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..!!

வி ஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. ஒரு குடும்ப பெண்ணின் க ஷ்டங்களையும், ஒரு அம்மாவாக, மனைவியாக, மருமகளாக… ஓய்வின்றி உழைக்கும் பெண்களுக்கு நாம் கொடுக்கும் பரிசு.

உன்னோட அறிவுரையெல்லாம் அடுப்படி யோட வச்சிக்கோ நீ வீட்ல சும்மாத் தான இருக்க என்ற வார்த்தைகள்  தான்.. இதை மையமாக வைத்து உருவாகிய கதை தான்.. இந்த பாக்கியலட்சுமி நெடுந்தொடர்.  இப்போது இந்த லா க்டவுனினால் பாக்கியலட்சுமி தொடரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் மகா சங்கமம் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.

பாக்கியலட்சுமி தொடரில் அவரின் மகளாக நடிப்பவர் தான் நடிகை நேகா மேனன் இவர் இதுக்கு முன் ஜீ தமிழில் ஒளிப்பரப்பான, யாரடி நீ மோகினி சீரியலில் நடித்துள்ளார். அவருக்கு சமீபத்தில் தான் ஒரு தங்கை பிறந்துள்ளது. அதாவது சரியாக இவருக்கு 19 வயதும் ஒரு மாதமும் நிறைவடைந்த நாள் அன்று தனக்கு கிடைத்த சகோதரியை பற்றி அவர் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்.

தற்போது அந்த குழந்தையின் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “சாஹிதி என் குழந்தை சகோதரி என்றும், நாங்கள் அவளை சிக்குஸ் மற்றும் பூந்தி என்றும் அழைக்கிறோம். நான் 19 வயதை எட்டிய ஒரு மாதத்திற்குப் பிறகு கடவுள் எங்களை (அம்மா, அப்பா மற்றும் நான்) இந்த குட்டி தேவதையை தந்து ஆசீர்வதித்தார்.

நீங்கள் அவள் மீது பொழிந்த அனைத்து அன்பிற்கும் ஆசீர்வாதங்களுக்கும் நான் முற்றிலும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். சிக்கு எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கம் என்றும் நான் அதிர்ஷ்டசாலி. இல்லையா ஒவ்வொரு சகோதரியும் ஒரே நேரத்தில் அம்மா மற்றும் சகோதரி உணர்வை பெற மாட்டார்கள்.

ஆனால் நான் அதை உணர்கிறேன். நான் உங்களுக்கு சொல்கிறேன், அந்த உணர்வு மிகவும் அபூர்வமானது என நெகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார். மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*