பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நாயகி சமீரா, அந்த நாடகத்தில் தன்னுடைய ரியல் காதலரான அன்வருடனே ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இதன் பின்னர் இருவரும் வேறு வேறு தொடர்களில் நடித்து வந்தாலும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்கள்.
மேலும் தற்போது சமீரா கர்ப்பமாக உள்ள நிலையில், அத்தகவலை அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் செய்தார்கள்.
இந்நிலையில் சமீரா மொட்டை மாடியில், கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கவனமுடன் இருக்குமாறு சமீராவுக்கு அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர்.
மேலும் ஒரு சிலரோ, அப்படியே சிறந்த கிரிக்கெட்டர் போன்று விளையாடுவதாக புகழ்ந்தாலும், பத்திரமாக இருங்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram