அடடே..!! பார்ரா.. இவர் தான் டிடியின் முன்னாள் கணவரின் இரண்டாவது மனைவியா! தீயாய் பரவும் புகைப்படம்!!

திரையரங்கம்

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, தனது கலகலப்பான பேச்சால், ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பர் மற்றும் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்த ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்களது திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் விஜய் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. ஆனால் திருமணமான ஒரு சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து டிடி தொகுப்பாளினியாகவும், சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் இவர்தான் ஸ்ரீகாந்தின் இரண்டாவது மனைவியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்திற்கு பிரபல தொகுப்பாளினியான ரம்யா ச்சோ கியூட் என கமெண்ட் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *