அடுத்த அ திர்ச்சி!! பிரபல பழம்பெரும் சினிமா மற்றும் சீரியல் நடிகரின் ம ரணம்.. மனம் வருந்திய உருகிய நடிகர்..!!

செய்திகள்

மூத்த திரைப்பட நடிகர் ‘ஜோக்கர்’ துளசி கா லமானார். தமிழ்நாட்டில், சென்னையில் பிறந்த ‘ஜோக்கர்’ துளசி ,1976 இல் வெளியான தேவராஜ்-மோகன் இயக்கிய “உங்களில் ஒருத்தி” படத்தில்  தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.

ஒரு மூத்த நடக நடிகராகவும், திரைப்பட நடிகராகவும் பல தசாப்தங்களாக  திரைத்துறை மற்றும் சின்னத்திரைகளில் நடித்து வந்த இவர்,  தமிழச்சி, இளைஞர் அணி, உடன் பிறப்பு, அவதார புருஷன் மற்றும் மண்ணைத் தொட்டு கும்பிடனும் என படங்களில் நடித்திருந்தார்.

குறிப்பாக 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த திருமதி பழனிச்சாமி படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. மேலும் கோலங்கள், வாணி ராணி, கேளடி கண்மணி, முத்தராம், கஸ்தூரி, நாணல், மாதவி, அழகு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

இந்நிலையில் இவரது மறைவு குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் ராம் மோகன், “ஆர்ஐபி – ஜோக்கர் துளசி. 70-களின் மைய பகுதியில் இருந்து நடித்து வருகிறார். மிகவும் பழமையான நபர், ஜோதிடம் போன்றவற்றில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். அவரது ஆத்மா சாதகதியை அடைய பிரார்த்திக்கிறேன். பல படங்களும் டிவி சீரியல்களும் ஒரே சமயத்தில் நடித்தார். அவரது இழப்பை தாங்கும் அவரது குடும்பத்தினருக்காக நான் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி.” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *