மாப்பிள்ளை, படிக்காதவன் என்று தனது மாமனார் ரஜினியின் பட டைட்டில்களை வைத்து நடிகர் தனுஷ் வரிசையாக படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘படிக்காதவன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தனுஷ் தமன்னா, விவேக் நடித்த இந்த படத்தில் விவேக் முழு நீள காமெடி ரோலில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் காமெடி நடிகராக விவேக் நடித்திருப்பார். ஆனால் விவேக்கிற்கு முன்பு வைகைப்புயல் வடிவேலு தான் இந்த படத்திற்கு கமிட்டாகி இரண்டு நாள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளாராம். அப்போது வடிவேலு ஸ்கிரிப்டில் இல்லாததையும் டைமிங்க்கு ஏற்றாற்போல் நடித்திருக்கிறார்.
அவருடைய அந்த நடிப்பு மற்ற நடிகர் நடிகைகளை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருந்ததால் பீ தி ய டை ந்த தனுஷ், ‘அண்ணா ஸ்கிரிப்ட்டில் இருப்பதை மட்டும் நடியுங்கள்’ என்று கூறியுள்ளார். வடிவேலுடன் தனுஷ் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டாராம். இதனால் கோ பம டை ந்த வடிவேலு தனுஷின் மூஞ்சிக்கு நேராகவே, ‘இதில் நடிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை’ என்று இயக்குனரிடம் தெரிவித்து கிளம்பி விட்டாராம்.
அதன் பின்புதான் அந்த வாய்ப்பு விவேக்குக்கு கிடைத்ததாம். இந்நிலையில் படிக்காதவன் திரைப்படத்தில் தனுஷுடன் வடிவேலு நடித்த ஒருசில காட்சியின் புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில், அவருடைய ரசிகர்களால் வியந்து பார்க்க வைக்கிறது.
ஒருவேளை ‘படிக்காதவன்’ படத்தில் வடிவேலுடன் தனுஷ் இணைந்து நடித்திருந்தால் வித்தியாசமான காம்பினேஷனில் காமெடி படம் உருவாகி இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், இந்த படத்தின் வாய்ப்பை வடிவேலு இழந்து விட்டார்.
அதே போல இதுவரை தனுஷ் மற்றும் வடிவேலு ஓரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை. ஒருவேளை இந்த படத்தில் நடித்திருந்தால், வடிவேலுவை தான் தற்போது தனது படங்களில் தனுஷ் காமெடியனாக போட்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. மேலும், இந்த படத்திற்கு பின்னர் தான் விவேக் மற்றும் தனுஷ் கூட்டணியில் பல்வேறு படங்கள் வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.