கே.ஜி.எப் திரைப்படத்தில் நடித்த நடிகை மாளவிகாவின் கணவரா இவர்?? அட.. சந்திரமுகி திரைபடத்தில் நடித்த பிரபல நடிகர் ஆச்சே!! இணையத்தை கலக்கும் காதல் புறாக்களின் போட்டோஸ்!!

KGF

சினிமாவிற்கு வருவதற்கு பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு கன்னட சேனலில், ‘பதுக்கு ஜடக்காபண்டி’ என்ற சட்ட நிகழ்ச்சியை நடத்தினார், மாளவிகா அவினாஷ். அப்போதே கன்னட மக்களிடையே ஓரளவிற்கு பிரபலாமாக பார்க்கபட்டார். பிறகு, பல கன்னடப் படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்று அதிலும் சிறப்பாக நடித்தார். தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், ‘ஜேஜே’ உட்பட சில தமிழ் படங்களின் மூலமாக தமிழில் தனக்கான இடத்தைப் பெற்றிருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் ஒலிபரப்பாகிய ‘செல்லமே’ நாடக தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். நடிகை, வழக்கறிஞர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்ட மாளவிகாவிற்கு, ‘KGF’ திரைப்படம் புதையலாகஅமைந்திருக்கிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில் ‘கே.ஜி.எஃப் – இரண்டாவது சேப்டரி’ல் என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும்னு இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

தற்போது இணையத்தில் இவர் தன கணவருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி ட்ரென்ட் ஆகி வருகிறது. அவர் வேறு யாரும் இல்லை, சந்திரமுகி படத்தில் ராமச்சந்திரா ஆச்சாரியாக நடித்த நடிகர் அவினாஷ் தான். இவர் கன்னடத்தில் வில்லன் கதாபாத்திரம் குணசித்திர கதாபாத்திரம் என அனைத்திலும் கலக்கியவர்.

தமிழில் விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தில் அசோக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்த அந்த சிறிய கதாபாத்திரத்தின் மூலமாக பிரபலமடைந்தவர். மேலும் இவருக்கு கன்னடத்தில் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2001 ஆம் ஆண்டு அவினாஷ் மற்றும் மாளவிகாவிற்கு காதல் ஏற்பட்டு பின்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் நடிகர்கள் என்பது பல ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் கணவன் மனைவி என்பது ஒரு சில ரசிகர்களுக்கு மட்டுமே தெரியும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*