பிரபல குணசித்திர நடிகர் பாண்டு தி டீர் ம ரணம்! க தறி அ ழும் குடும்பத்தினர்.. அ திர்ச்சியில் திரையுலகம்..!!

திரையரங்கம்

பிரபல நகைச்சுவை நடிகரும், குணச்சித்திர நடிகருமான பாண்டு(வயது74) கொரோனாவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். கொ ரோனா பா திப்பின் காரணமாக பாண்டுவும், அவரது மனைவி குமுதாவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சி கிச்சை ப லனின்றி இன்று பாண்டு உ யிரிழந்தார்.

அவரது மனைவி குமுதா தீவிர சி கிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். 1970ம் ஆண்டில் மாணவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பாண்டு, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் விவேக், இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, தயாரிப்பாளர் பாபுராஜா, பாடகர் கோமகன், நடிகர் பாண்டு என்று திரையுலகினர் தொடர்ந்து கொ ரோனாவால் உ யிரிழப்பது ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது.

அடிப்படையில் ஓவியரான பாண்டு, ’கேப்பிடல் லெட்டர்ஸ்’நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார் பாண்டு. திரையுலக பிரபலங்களில் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகள் அழகுற பாண்டு காரணமாக இருந்தார். அதிமுகவின் கொடியை வடிவமைத்துக் கொடுத்தவர் பாண்டு.

மாணவன், கரையெல்லாம் செண்பகப்பூ, என்னுயிர் கண்ணம்மா, பணக்காரன், பாட்டுக்கு நான் அடிமை, நடிகன், சின்னத்தம்பி , ரிக்ஷா மாமா, திருமதி பழனிச்சாமி, வால்டர் வெற்றிவேல், சிந்துநதிப் பூ, நாட்டாமை, அசுரன், முத்து ,உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை , வாலி, பூமகள் ஊர்வலம், ஷாஜகான், சமுத்திரம், வில்லு என்று நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாண்டுவின் சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ். இவரும் சிறந்த நகைச்சுவை நடிகர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *