பிரபல தமிழ் பட இயக்குனர் கொரோனா தொற்றால் தி டீர் ம ரணம்! பே ரதிர்ச்சியில் குடும்பத்தினர் க ண்ணீரில் மூ ழ்கிய திரையுலகம்..!!

திரையரங்கம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரித்த படம் உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவர் கோவிட் தொற்று காரணமாக காலமானார் என்ற செய்தி அனைத்து திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பிரபல இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் இயக்குனர் தாமிரா இயக்கத்தில் உருவான திரைப்படம் ’ரெட்டைசுழி’. இந்த திரைப்படத்தில் இயக்குனர் இமயம் பாரதி ராஜா மற்றும் இயக்குனர் சிகரம் பாலசந்தர் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

மேலும் சமுத்திரக்கனி நடித்த ஆண்தேவதை உள்ளிட்ட ஒருசில படங்களை இயக்கியவர் இயக்குனர் தாமிரா. இவர் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சற்று முன் காலமானார் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து திரையுலகினர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *