மதுர படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகையா இது? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? அவரா இது என புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்.!!

திரையரங்கம்

தமிழ் திரையுலகை பொறுத்தவரை தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் இவர்கள் ஒரு சில படங்களில் நடித்ததும் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் பொய் விடுகின்றனர்.

காரணம் தற்போது பல புதுமுக நடிகைகள் தமிழ் சினிமாவை தேடி வந்த வண்ணம் உள்ளனர். இந்த வகையிலே அந்த நடிகைகளுக்கு சினிமாவில் போதிய வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைப்பதில்லை. இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் மதுர.

இந்த படத்தில் விஜயை ஒரு புறமாக கா தலிக்கும் நடிகையாக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் ரஷிதா. கன்னட மொழி நடிகையான இவரின் உண்மையான பெயர் ஸ்வேதா. கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்த இவர் 2002-ம் ஆண்டு புனித் ராஜ்குமார் கதாநாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அப்பு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமானார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் இவரது தந்தை பி.சி.கௌரி ஷங்கர் கன்னட மொழியில் பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார்.

மேலும் இவரது தாயான மம்தா ராவ் அவர்களும் ஒரு பிரபல கன்னட மொழி நடிகையாவார். இந்நிலையில் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் இவர் பல படங்களை தயாரித்தும் உள்ளார். இப்படி இருக்கையில் சில வருடம் அரசியல் மீது கொண்ட நாட்டத்தால் சில வருடம் தன் கவனத்தை செலுத்தி இருந்தார்.

மேலும் இதனை தொடர்ந்து பிரபல கன்னட இயக்குனரான பிரேம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பின் திரையுலகில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டு தன் குடும்பத்தை கவனிப்பதில் தன் முழுகவனத்தையும் செலுத்தி உள்ளார். மேலும் இவருக்கு சூர்யா எனும் மகனும் உள்ளார்.

 

திரைப்படங்களில் பார்ப்பதற்கு படு மாடர்னாக பிட்டாக இருந்த ரஷிதா தற்போது உடல் எடை அதிகரித்து பார்க்க முடியாத அளவிற்கு குண்டாகி உள்ளார். இந்நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *