என்னது பிரபல நடிகை லட்சுமிக்கு 3 கணவர்களா? வயதும் குறைவு.. ஏற்கனவே 2 கணவன்கள்!! நடிகை லட்சுமிக்கு 3வது கணவன் ஆனது ஏன்? நடிகர் சிவச்சந்திரன் சொன்ன காரணம் இதோ..!!

திரையரங்கம்

நடிகை லட்சுமி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். வயதானாலும் தனக்கு ஒத்துப் போகும் கதாபாத்திரத்தை சிறப்பாக தெரிந்தெடுத்து நடித்து வருகிறார். துரதிர்ஷ்டவசமாக இவருக்கு முதல் இரண்டு திருமணங்கள் கைகூடவில்லை.

ஆனால் மூன்றாவதாக நடிகர் சிவ சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்துக் கொண்டு 32 வருடங்கள் ஆன நிலையில் அவருடைய வாழ்க்கையின் சிறப்பான பக்கங்களை முதன் முறையாக சிவசந்திரன் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் எதற்காக நடிகை லட்சுமியின் மூன்றாவது கணவராக மாறினார் என்பது குறித்தும் அவர் கூறியிருக்கிறார். நடிகர் சிவசந்திரனும் நடிகை லட்சுமியும் இணைந்து நான்கு திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இந்த திரைப்படங்களில் நடித்தது மூலமாக இருவருக்குமிடையில் நல்ல நட்பு உருவாகி இருக்கிறது.

இது குறித்து சிவசந்திரன் இடம் கேட்டபொழுது, என்னிடம் நிறைய பேர் கேட்டுள்ளனர். எதற்காக சார் கல்யாணம் பண்ணிக்க அப்படின்னு. ஆனா இதுக்கெல்லாம் சரியான பதில் என்னால சொல்ல முடியாது. ரெண்டு பேரும் பார்த்தோம். அப்புறம் பிடிச்சி இருந்தது அதனால ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டோம்.

அவ்வளவு தான். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் நாங்கள் இருவருமே திருமணம் செய்து கொண்டோம். ஒருவேளை எங்கள் இருவருக்கும் இடையில் ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு இருந்து இருந்தால் எங்களுடைய திருமண வாழ்க்கை ஆரம்பித்த ஒரே வருடத்தில் முடிவை சந்தித்து இருக்கும்.

ஆனால் நாங்கள் இருவருமே அப்படி கிடையாது. நாங்கள் முதலில் நல்ல நண்பர்கள் பின்பு தான் கணவன் மனைவி எல்லாமே. லட்சுமி பொருத்த வரைக்கும் என்ன பெரிய பணக்காரன் என நம்பி என்னை கல்யாணம் பண்ணிக்கல. என்கிட்ட எதையுமே எதிர்பார்க்காமல் என்னை மட்டும் விரும்பி அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.

அதுமட்டுமில்லாம நான் லட்சுமி தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு எழுதி இருந்தது போல. அதனால நான் அவங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன். லட்சுமி கிட்ட அப்பவே கேட்டேன் எதற்காக என்ன கல்யாணம் பண்ணிக்கிறிங்க அப்படின்னு. அதற்கு அவங்க ஐ லைக் யூ ன்னு சொன்னாங்க.

மேலும் எங்க ரெண்டு பேருக்கும் திருமணமாகி 32 வருஷமாச்சு. ஆனால் இன்று வரை நாங்க ரெண்டு பேருமே நல்ல நண்பர்களாக வாழ்ந்து வரும். நான் எப்போதுமே ஃப்ரெஷ்ஷாக இருக்கோம் பிரண்ட்ஸாக இருக்கோம்.. தனக்கும் தனது மனைவி லட்சுமிக்கும் இடையே உள்ள காதலை அழகாக வெளிப்படுத்தினார் நடிகர் சிவசந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *