ரகசியமாக திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகர்! மணப்பெண் யார் தெரியுமா? யாருன்னு நீங்களே பாருங்க.. இதோ..!!

பிரபல நடிகர் ஆர்.கே சுரேஷ் சினிமா ஃபைனான்சியர் மது என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். சலீம், தர்மதுரை, அட்டு ஆகிய படங்களை தயாரித்ததன் மூலம் சினிமா வட்டாரத்தில் பிரபலமானவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ்.

பின் இவர் தாரதப்பட்டை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் பின்னர் பில்லா பாண்டி, மருது போன்ற பல படங்களில் நடித்தார். ஆர்.கே.சுரேஷுக்கும் சீரியல் நடிகை திவ்யாவுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக கடந்தாண்டு செய்திகள் வெளியாகின.

மேலும் இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷே அதிகாரப்பூர்வமாக இதை அறிவித்தார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ, அந்தத் திருமணம் நடைபெறவில்லை. எனக்கும் அவருக்கும் இடையில் நிறைய விடயங்களில் கருத்து வேறுபாடு நிலவுகிறது என அப்போது திவ்யா தரப்பில் சொல்லப்பட்டது.

இந்நிலையில், ஆர்.கே. சுரேஷுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த சினிமா ஃபைனான்சியர் மது என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. மிகவும் ரகசியமாக நடந்த இந்தத் திருமணத்தில் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*