
கோலிவுட்டில் மிக வித்தியாசமாக வரும் திரைப்படங்கள் எல்லாமே வெற்றி பெறுவது இல்லை. ஆனால் அப்படி வெற்றி பெற்ற படங்கள் அனைத்துமே என்றுமே மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். அப்படி வெளியான படங்களில் நடித்த நடிகர்களையும் யாரும் மறக்க முடியாது தான்.
அப்படிபட்ட கும்கி படம் பலரையும் தமிழ் சினிமாவில் அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. விக்ரம் பிரபு தம்பி ராமையா போன்ற நடிகர்கள் பெரிய பெரிய படங்களில் நடிக்க இந்த படம் தான் அடித்தளம். அப்படி தம்பி ராமையாவுடன் சேர்ந்து நடித்த அவர்கள் உண்டியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து இவர் பாஸ் என்கிற பாஸ்கரன், ஈட்டி, ஜாக்பாட், கணிதன் போன்ற பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார்.
இவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் பட அதிபர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் அஸ்வினுக்கு கூடிய விரைவில் காதல் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் சோசியல் மீடியாவில் வை ரலாகி வருகிறது.
நடிகர் அஸ்வின் அவர்கள் சென்னை கேகே நகரை சேர்ந்த ராஜசேகரின் மகள் வித்யா ஸ்ரீயை காதலித்து வந்தார். வித்யாஸ்ரீ அமெரிக்காவில் எம் எஸ் பட்டம் படித்து முடித்தவர். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்கள்.
பின் இவர்களின் காதலுக்கு இரு வீட்டார் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து நடிகர் அஸ்வின் வித்யாஸ்ரீ இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும் இவர்கள் திருமணம் சென்னை சூளைமேட்டில் உள்ள அஸ்வின் வீட்டில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் கொ ரோனாவின் தா க்கம் தீ விரமாக இருப்பதால் இவர்களுடைய திருமணம் எளிய முறையில் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது
Leave a Reply