என்னது..!! 20 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பொருள்… தற்போது கிடைத்த அதிசயம்! இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திலுள்ள எடம்பூரடி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணி.
இவர் தனது தங்க காதணியை கடந்த 2020 ஆம் ஆண்டு வயல்வெளி ஒன்றில் தொலைத்துள்ளார். தொடர்ந்து, அவரது தங்க காதணியை அப்பகுதி முழுவதும் அவர் தேடியுள்ளார். ஆனால் அந்த காதணி கிடைத்த பாடில்லை.

இந்நிலையில், மிகவும் சுவாரஸ்ய மற்றும் அதிர்ஷ்ட நிகழ்வாக, நாராயணியின் காதணி 20 ஆண்டுகளுக்கு பின் அதே இடத்தில் வைத்து கிடைத்துள்ளது. சுபிக்ஷா கேரளம்’ என்னும் திட்டத்தின் கீழ் சில பெண்கள், 100 நாள் வேலைவாய்ப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது நாராயணி, நகை காதணியை தொலைத்த அதே இடத்தில் வைத்து, பேபி என்ற பெண்மணி ஒருவர் தங்கம் போல ஏதோ மின்னுவதை கண்டுள்ளார். அப்போது அவருடன் நாராயணியின் மகள் மாலினி இருந்துள்ளார். அவர் தனது தாயின் தொலைந்து போன கம்மலை அடையாளம் கண்டு கொண்டார்.

அந்த கம்மலை நாராயணி, சுமார் அறுபது முதல் எழுபது ஆண்டுகளுக்கு முன் வாங்கியிருக்கலாம் என கருதுகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் நாராயணின் கம்மல் தொலைந்த போது, அப்பகுதி மக்கள் முழுவதும் அதனை தேடி அலைந்ததால், அப்பகுதி மக்களுக்கு இந்த காதணி தொடர்பான சம்பவங்கள் தெரிந்த ஒன்றே. இதனால் அந்த கம்மலை அவர்கள் சுத்தம் செய்து, நாராயணியிடம் சேர்த்தனர். 20 வருடங்களுக்கு பிறகு அவரது தங்க கம்மல் கிடைத்ததால், பூரிப்பின் உச்சத்திற்கே நாராயணி சென்று விட்டார்.

2000 ஆம் ஆண்டின் போது நாராயணி நகையை தொலைத்த சமயங்களில், ஒரு சவரன் நகையின் விலை சுமார் 4 ஆயிரம் ரூபாய் வரை இருந்த நிலையில், தற்போது ஒரு சவரன் நகை 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*