விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்க போவது யார் நிகழ்ச்சியை ஜாக்குலினுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருபவர் ரக்ஷன்.இவர் கடந்த 1991ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரது தந்தை சிறுவயதிலேயே உ யி ரி ழ ந் து விட்டார் தாய்தான் க ஷ் ட ப் ப ட் டு வளர்த்தார். ரக்ஷனுக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் அதிகம். இதனால்தான் பிஎஸ்சி விசுவல் கம்யூனிகேஷன் படித்தார் .படித்த முடித்த பின்னர் வேலை கிடைக்காமல் பு டவை வியாபாரம் செய்தார். பின்னர் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார்.
அப்போது என் காதல் தேவதை படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. பின்னர் ராஜ் டிவியில் தொகுப்பாளராக வேலை கிடைத்தது.அங்கிருந்து கலைஞர் டிவிக்கு தாவினார். இசையருவியில் குத்து பாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பின்னர் கலைஞர் டிவியில் திரை நட்சத்திரங்களை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு ரோபோ சங்கரின் அறிமுகம் கிடைக்கவே விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சுடா டீமுடன் இணைந்தார்.
தற்போது ஒரு நல்ல தொகுப்பாளராக சிறந்து விளங்குகிறார்.மேலும் அவர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளை அடைத்தால் படம் ஒரு பெரிய வெற்றி படமாக அமைந்தது எனபது குறிப்பிடத்தக்கது.தற்போது குக் வித் கோமாளி சோவில் anchor பணியை சிறப்பாக செய்துள்ளார்.