விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சிரிச்ச போச்சு மூலம் அறிமுகமானவர் புகழ். இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நகைச்சுவையான நிகழ்ச்சியின் மூலம் மக்களை மகிழ வைத்து வந்தார். ஆனால் குக் வித் கோமாளி என்ற ஒரே நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பை வெள்ளித்திரையில் ஏற்படுத்தியது.
ஆம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், தற்போது தமிழ் திரையுலகில் உருவாகி வரும் 7 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் குக் வித் கோமாளி புகழ், தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த அன்பான புகைப்படம்..