என்னது! நடிகர் தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது மகளா? நம்பவே முடியல.. அதுவும் இந்த படத்திலா.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!!

திரையரங்கம்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக உப்பேனா தெலுங்கு படம் புகழ் க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி படத்திற்கு நல்ல வரேவற்பு கிடைத்தது. இதையடுத்து மாரி 2 படத்தை எடுத்து வெளியிட்டனர். இந்நிலையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கவிருக்கிறார் தனுஷ்.

அது மாரி 3 படமா இல்லை புது கதையா என்பது இதுவரை தெரியவில்லை. பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். இது தொடர்பாக க்ரித்தியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று கூறப்படுகிறது. புதுமுகம் புச்சி பாபு சனா இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான உப்பேனா தெலுங்கு படத்தின் ஹீரோயின் தான் இந்த க்ரித்தி ஷெட்டி.

உப்பேனா படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். 17 வயதே ஆகும் க்ரித்தி ஷெட்டிக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. தன் கெரியர் பிக்கப் ஆவதை புரிந்து கொண்ட க்ரித்தி சம்பளத்தை உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. க்ரித்தி ஷெட்டி தனுஷுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்கிற தகவல் அறிந்த தமிழ் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *