படத்தில் தான் தேனி குஞ்சாரம்மா இப்படி.?உண்மையில் இவரை பற்றி யாரும் அ றிந்திராத சில உண்மை தகவல்கள் இதோ..!!

செய்திகள்

இவர் தேனியை சேர்ந்தவர் பாரதிராஜாவின் பல படங்களில் பார்த்திருக்கலாம் சமீபத்தில் மறைந்துவிட்டார்.சிறந்த நாட்டுப்புற பாடகி ரஹ்மான் இசையமைத்த கொக்கு சைவ கொக்கு என்ற பாடலையும் காதலன் படத்தின் சைதாப்பேட்டை ராணிப்பேட்டை பாடலையும் பாடியுள்ளார்.குறிப்பாக கருத்தம்மா படத்தில் கள் ளிப் பால் கொடுக்கும் கிழவியாக வந்து அனைவரையும் கவர்ந்தார்.விசில் படத்தில் விவேக்கின் பாட்டியாக பாயாசம் கொடுக்கும் பாட்டியாக காமெடி வேடத்தில் நடித்திருந்தார். சில வருடங்கள் முன் மறைந்து விட்டார்.

இவரின் படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் பத்தி இங்கு காணலாம்.ராம்கி மற்றும் சீதா நடிப்பில் வெளியான மருது பாண்டி திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்ட ஒரு திரைப்படம். இப்படத்தின் மூலம் ராம்கியின் திரைவாழ்க்கை மாறியது என்று கூட கூறலாம். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தேனி குஞ்சாரம்மா நடித்திருப்பார். இவர் வரும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

பாரதிராஜா இயக்கத்தில் மனோஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் தாஜ்மஹால். இப்படத்தில் மனோஜ்விற்க்கு ஜோடியாக ரியா சென் நடித்திருப்பார்.படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டும் தேனி குஞ்சாரம்மா நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.படம் அந்த அளவிற்கு பெரிய ஹிட் ஆகவில்லை.

பிரபு மற்றும் ரம்யா கிருஷ்ணா நடிப்பில் வெளியான பட்ஜெட் பத்மநாதன் திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக பிரபு வாழ்க்கை நடத்துவதற்காக ஒவ்வொரு விஷயத்திற்காக பட்ஜெட் போட்டு செலவு செய்வார். இந்த காட்சிகள் தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் தேனி குஞ்சாரம்மா  நடித்து ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றார்.படம் வெற்றி அடைந்தது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விருமாண்டி இப்படம் அன்றைய காலகட்டத்தில் 200 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. கிராமம் கலந்த கதை என்பதால் இப்படத்தில் தேனி குஞ்சாரம்மாவிற்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை கமல்ஹாசன் கொடுத்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு படத்தில் தேனி குஞ்சாரம்மா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் படத்தில் விவேக் உடன் தேனி குஞ்சாரம்மா குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுப்பது போல காட்சி அமைத்து ரசிகர்களிடம் தேனி குஞ்சாரம்மாவிற்கு பாராட்டை வாங்கி கொடுத்தனர். முன் ஒரு காலத்தில் பெண் குழந்தை பிறந்தாலே இப்படி தான் கள்ளிப்பால் கொடுத்து கொன்று விடுவார்களாம்.

பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த தேனி குஞ்சாரம்மா ஏ ஆர் ரகுமான் இசையில் பேட்ட ராப், கும்மியடி மற்றும் கொக்கு சேவ கொக்கு போன்ற பல பாடல்கள் பாடியுள்ளார்.இன்னும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் ஒரு நிமிடம் நினைவு கூறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *