சாக்லேட் பாய் நடிகர் அப்பாஸ் தாடி, தலைமுடி நரைத்து ஆளே அடையாளம் தெரியல..!! அவர் மனைவியை பார்த்துள்ளீர்களா ??

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் பிரசாந்த், மாதவன் எனப் பலரைக் கூறலாம்.  அந்த வகையில் நடிகர் அப்பாஸ் அவர்களும் சாக்லெட் பாயாக வலம் வந்தவர்.

தமிழ் சினிமாவில் வெள்ளையான ஹீரோக்கள் கால்தடம் பதித்ததிலிருந்து பல பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தவர் அப்பாஸ். இவர் 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

 

இவர் நடித்த முதல் திரைப்படம் சூப்பர் ஹிட் அடைந்தது அதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது.  நடிகர் அப்பாஸ் கல்லூரி படிக்கும் பொழுது மாடலிங் செய்து வந்தார்,  அப்பொழுதுதான் இயக்குனர் கதிர் தன்னுடைய கதைக்காக புதுமுக நடிகரை தேடி வந்தார்.

இந்த நிலையில் அவரது நண்பர்கள் மூலம் இயக்குனர் கதிருக்கு அறிமுகமானவர்தான் அப்பாஸ் அதன் பிறகே தன்னுடைய முதல் திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து அஜித், விஜய் அவர்களுக்கு போட்டியாக வருவார் என பலரும் கனவு கண்டார்கள்.

மேலும் அப்பாஸ் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ,மலையாளம் என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் எராம் அலி என்னும் பேஷன் டிசைனர் அவர்களுக்கும் அபாஸ் அவர்களுக்கும் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இந்த தம்பதியருக்கு எமிரா மற்றும் அய்மான் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது இவர்கள் டிவி சீரியல்களிலும் விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்கள், அப்படி இருக்கும் வகையில் அப்பாசின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.  அந்தப் புகைப்படத்தில் அப்பால் தாடி முடி என அனைத்தும் நரைத்துப் போய் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் அட நம்ம சாக்லேட் பாயா இப்படி இருப்பது என ஷாக் அடைகிறார்கள்.எல்லாருக்கும் வயது ஆக தானே செய்யும் ஆனால் இன்னமும் ஒரு சில நடிகர்கள் தங்கள் நடிப்பு திறமையை காட்டிக்கொண்டு தான் இருக்கிறாரகள்.அந்த வகையில் நடிகர் ரஜினி கமல் விஜய் அஜித் மாதவன் என பல்வேறு நடிகர்கள் இந்த வரிசையில் உள்ளனர். ஒரு சில நடிகர்கள் இதில் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் போய்விட்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*